விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா அதிகரிப்பு : முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா அதிகரிப்பு :  முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்
Updated on
1 min read

கரோனா தொற்றாளர்கள் எண் ணிக்கை படிப்படியாக குறைந்த நிலையில், தற்போது சென்னையில் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசு கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்கள் இ பாஸ் கட்டாயம் பெறவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நாளொன் றுக்கு சுமார் 500 பேர் கரோனா தடுப்பூசி போட்டுவருகின்றனர்.

கடந்த ஜனவரி 25-ம் தேதி 11 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி கரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 8 ஆக குறைந்தது. பின்வரும் நாட்களில் ஒன்று, இரண்டு என அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த 10-ம்தேதி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி தொற்றாளர் களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் விழுப்புரம் நகரில் நேற்று ஒரே இடத்தில் பணியாற்றும் 4 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.

தற்போது பொது இடங்களுக்கு வருபவர்களில் 95 சதவீதத்தினர் முகக்கவசம் அணிவதில்லை. அணியாதவர்கள் மீது காவல்துறை யினரும் நடவடிக்கை எடுப்ப தில்லை.

தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ள நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்த அனை வரும் முகக்கவசம் அணிய வேண்டும். அணியாதவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என விழுப்புரம் நகராட்சி நிர் வாகம் வாகனங்கள் மூலம் நகர் முழுவதும் விழிப்புணர்வு பரப் புரை செய்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in