‘ஓய்வுபெற்ற காவலர்களுக்கு தேர்தல் பணி’ :

‘ஓய்வுபெற்ற காவலர்களுக்கு தேர்தல் பணி’  :
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட விருப்பம் உள்ள ஓய்வுபெற்ற காவலர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப் பாளர் டாக்டர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஓய்வுபெற்ற காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதற்காக, ஓய்வு பெற்ற நல்ல உடல்நிலையில் உள்ள 65 வயதுகுட்பட்ட ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் சிறப்பு காவலர்களாக பணியாற்றிட அழைக்கப்படுகின்றனர்.

தேர்தல் பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் விருப்ப கடிதத்தை அளித்து வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் 2 நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் பிரிவை 04172-290871 அல்லது 97906-48992 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in