உரிமம் பெற்ற 470 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு :

உரிமம் பெற்ற 470 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெற்ற 470 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப் படைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், அரசியல் கட்சி பிரமுகர், தொழில் அதிபர்கள், முன்னாள் ராணுவத்தினர் தங்களது பாதுகாப்புக்காக உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்துள்ளனர். அவ்வாறு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் காலங்களில் அவர்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.

அதன்படி ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 548 துப்பாக்கி உரிமைதாரர்கள் மற்றும் உரிமம் காலாவதியாகி புதுப்பிக்கத் தவறியவர்கள் தங்களின் பொறுப்பில் வைத்துள்ள அனைத்து விதமான துப்பாக்கிகள் மற்றும் இதர பொருட்களை தங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க, மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, உரிமம் பெற்றிருந்த 548 துப்பாக்கிகளில், 470 துப்பாக்கிகள் தொடர்புடைய காவல் நிலையங்களில் ஒப் படைக்கப்பட்டன. மீதமுள்ள 78 துப்பாக்கிகள் வங்கி பாதுகாப்பு போன்ற அத்தியாவசியப் பணிக்காக வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும் தினத்திலிருந்து ஒரு வார காலத்துக்குப் பின்னர், துப்பாக்கிகளை உரியவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in