நாளை மற்றும் நாளை மறுதினம் - வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம் :

நாளை மற்றும் நாளை மறுதினம் -  வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம் :
Updated on
1 min read

நாளை (மார்ச் 13) மற்றும் நாளை மறுதினம் (14-ம் தேதிகளில்) புகைப்படத்துடன் கூடியவாக்காளர் அடையாள அட்டையை பெற திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பம் செய்த நபர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவுபடி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நாளை (மார்ச் 13) மற்றும் நாளை மறுதினம் (14-ம் தேதிகளில்) 2 நாட்களில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை (e-EPIC) பதிவிறக்கம் செய்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.எனவே, புதிதாக விண்ணப்பம் செய்த வாக்காளர்கள் அனைவரும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு புகைப்படத்துடன் கூடிய மின்னணு வாக்காளர் அட்டையாள அட்டையை பெற்றுக் கொள்ளவும்’’ என தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in