உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு :

உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு :
Updated on
1 min read

பழைய எண்ணெய், பாலித்தீன், செயற்கை நிறமூட்டிகள், அஜினமோட்டா பயன்பாடுகள் மற்றும் கரோனா வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என்பன குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செயற்கை வண்ணம் பூசப்பட்ட கோழிக்கறி, மீன் 3.5 கிலோ, கெட்டுப்போன காய்கறிகள் 4 கிலோ ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா 1 கிலோ வீதம் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக இந்த குற்றத்தில் ஈடுபட்டதால், ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சுத்தமில்லாத உணவு தயாரித்து விற்பனை செய்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. துரித உணவு தயார் செய்பவர்கள், தினமும் சமையல் எண்ணெய்யை மாற்றிக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மேலும், கடையின் உணவு உரிமத்தை புதுப்பிக்காத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கலப்பட உணவு தொடர்பாக 9444042322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in