துஞ்சம், நெம்மேலி கிராமங்களில் - 150 ஆடுகள் நோய் பாதிப்பால் உயிரிழப்பு : நிவாரணம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

துஞ்சம், நெம்மேலி கிராமங்களில் -  150 ஆடுகள் நோய் பாதிப்பால் உயிரிழப்பு  :  நிவாரணம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் துஞ்சம், நெம்

மேலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில்கால்நடைகளை வளர்க்கின்றனர்.

இதில், வெள்ளாடுகள் அதிகம்.இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக இப்பகுதியில் உள்ள வெள்ளாடுகள் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து வருகின்றன. இதில்துஞ்சம், நெம்மேலி உள்ளிட்ட கிராமங்களில் 150-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. இதனால் கால்நடைகளை வளர்த்துவரும்விவசாயிகள் பெரிதும் கவலைஅடைந்துள்ளனர்.

இதுகுறித்து வட்டார கால்நடைமருத்துவமனையில் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரையிலும் எடுக்கப்படவில்லை. கால்நடை மருத்துவர் ஹேமாவதி, மருத்துவ உதவியாளர் சுப்பிரமணி ஆகியோர், தகவல் தெரிவித்த பின்னரும் தடுப்பு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் மாவட்டசெயலாளர் ஜி.மோகனன் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நோய்வாய்ப்பட்டுள்ள ஆடுகளை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று நேரில்கொண்டு வந்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

மேலும் இறந்த ஆடுகளுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருக்கழுக்குன்றம் செயலாளர் கோதண்டம், மார்க்சிஸ்ட் கட்சியின் திருக்கழுக்குன்றம் வட்டச் செயலாளர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும், சங்கத்தின் சார்பில் கால்நடை உதவி இயக்குநர் புகழேந்தியிடமும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் கொண்டு வந்த நோய்தாக்குதலுக்கு உள்ளான ஆடுகளிடம் இருந்து மாதிரிகளை எடுத்துக்கொண்டதுடன் உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் மருத்துவக் குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in