சிவகங்கையில் மேலூர் சாலையில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை பரிசோதித்ததில் ஆவணமின்றி 470 ரேஷன் அரிசி மூட்டைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன், லாரியையும் பறிமுதல் செய்தனர்.