

தஞ்சாவூர் கீழ அலங்கம் பீரங்கிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை(62). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு, பெங்களூருவில் வசிக்கும் தனது மகளைப் பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றுவிட்டார்.
பின்னர், நேற்று காலை ஊருக்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோ வில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.75 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தஞ்சாவூர் கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.