Regional02
திருப்பத்தூரில் : ரூ.55 ஆயிரம் பறிமுதல் :
திருப்பத்தூர் அடுத்த சின்ன உடையாமுத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ் வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த யுகேஷ்பாபு என்பவரிடம் சோதனை நடத்தியதில், அவரிடம் ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.55 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, திருப்பத்தூர் மாவட்ட அரசு கருவூல அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
