

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, ஊத்தங்கரை தொகுதிக்கு, கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப்பதிவு இயந்திரம் தலா 408, விவிபேட் 442, பர்கூர் தொகுதிக்கு கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப்பதிவு இயந்திரம் தலா 416, விவி பேட் 451, கிருஷ்ணகிரி தொகுதிக்கு கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப்பதிவு இயந்திரம் தலா 445, விவி பேட் 483-ம் அனுப்பி வைக்கப்பட்டது. வேப்பனஹள்ளி தொகுதிக்கு கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப்பதிவு இயந்திரம் தலா 441, விவி பேட் 478, ஓசூர் தொகுதிக்கு கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப்பதிவு இயந்திரம் தலா 594, விவி பேட் 644, தளி தொகுதிக்கு கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப்பதிவு இயந்திரம் 411, விவி பேட் 446ம் அனுப்பப்பட்டது. அதன்படி, மொத்தம் 2715 கட்டுப்பாட்டு இயந்திரம், 2715 வாக்குப்பதிவு இயந்திரம், 2944 விவி பேட் அனுப்பப்பட்டுள்ளது. இயந்திரங்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டுள்ளன.