Published : 10 Mar 2021 03:12 AM
Last Updated : 10 Mar 2021 03:12 AM

காஞ்சியில் மார்ச் 13-ம் தேதி தேர்தல் விழிப்புணர்வு ஓட்டம் :

காஞ்சிபுரத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வரும் 13-ம் தேதி மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.ரமேஷ் வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வரும் மார்ச் 13-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த ஓட்டம் காலை 7 மணிக்கு காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கி, கால்நடை மருத்துவமனை சாலை வழியாக இரட்டை மண்டபம், வள்ளல் பச்சையப்பன் சாலை, மேட்டுத் தெரு வழியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடையும். போட்டி தூரம் 3 கி.மீ. ஆகும்.

இதில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்பட உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

மாரத்தான் போட்டியில் பங்கேற்க பதிவு செய்யும் இடம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம், காஞ்சிபுரம். பதிவு செய்யும் நாள் மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 13-ம் தேதி காலை 6 மணிவரை. மேலும் விவரங்களுக்கு 7401703481 என்றசெல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x