

தூத்துக்குடியில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணை பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (42). ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுபெண்ணுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்புபழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்வதாக கூறி கடந்த 16.07.2009 அன்று அந்த பெண்ணை தூத்துக்குடியில் உள்ளஒரு விடுதியில் வைத்து ராம்குமார் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து,ராம்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை நீதிபதி பாண்டியராஜன் விசாரித்து, ராம்குமாருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் சுபாஷினி ஆஜரானார்.