

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல்கண்காணிப்புக் குழுவினர் நடத்தியவாகனச் சோதனையில் இதுவரை ரூ.13.74 லட்சம் மற்றும் ரூ.41 ஆயிரம் மதிப்பிலான வேட்டி,தொப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 18 பறக்கும் படை குழுக்கள், 18 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 12 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 48 குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி பறக்கும் படை குழுவினர் கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட 2 வாகனங்களை வழிமறித்து சோதனை செய்தனர்.ஒரு வாகனத்தில் வந்தவர்களிடம்ரூ.77 ஆயிரமும், மற்றொரு வாகனத்தில் வந்தவர்களிடம் ரூ.2 லட்சமும் இருந்தது.
இதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லாததையடுத்து பணத்தை பறிமுதல் செய்து தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இருவரும் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்துக்கு மீன் வாங்குவதற்காக வந்த கேரளாவை சேர்ந்த மீன் வியாபாரிகள் என தெரிய வந்தது.
இதேபோல் பறக்கும் படையை சேர்ந்த மற்றொரு குழுவினர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை அடுத்துள்ள போல்பேட்டை ரவுண்டானா அருகே, அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். காரில் இருந்தநபரிடம் ரூ.1.20 லட்சம் பணம்இருந்தது. முறையான ஆவணங்கள் இல்லாததையடுத்து பணத்தை பறிமுதல் செய்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மாவட்டம் முழுவதும் நேற்றுகாலை வரை தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் 13 இடங்களில் நடத்திய சோதனையில் மொத்தம் ரூ.13,73,390 ரொக்கப் பணத்தையும், ரூ.41 ஆயிரம் மதிப்பிலான கட்சி கறை வேட்டிகள், தொப்பிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவில்பட்டி
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி விசாரித்தனர். லாரியில் இருந்தவர்கள் வேலுச்சாமி(60) ஆசீர்வாதம் (38), ராமசுப்பு(40) என்பதும், 3 பேரும் மளிகை மற்றும்பழ வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. அவர்களிடம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து800 பணம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மதுரைக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் பழங்கள் வாங்கச் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விளாத்தி குளம் வட்டாட்சியர் ரகுபதியிடம் ஒப்படைத்தனர்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் அவர்களிடம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 800 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.