

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள பச்சிகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (70). ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர். இவரது மகன் கிருஷ்ணன் (47) கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி நாகராணி (40) மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நாகராணி மனநலம் பாதிக்கப் பட்டிருந்தார். அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சையும் பெற்று வந்தார். இவர் மன நலம் பாதிக்கப் பட்டுள்ளதால் தனி அறையில் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை நாகராணி, தனது மாமனார் வெங்கட் ராமனின் தலையில் செங்கற்களால் தாக்கினார். இதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த குருபரப்பள்ளி போலீஸார் நாகராணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.