

80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு இருப்பதாக சந்தேகப்படுபவர்கள் விரும்பினால் தபால் வாக்கு செலுத்தலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் 80 வயதிற்கு மேற் பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர் கள், பாதிப்பு இருப்பதாக சந்தேகப்படுபவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தபால் வாக்குகள் செலுத்தலாம். இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக சென்று படிவம் 12டி வழங்கி வருகின்றனர். 12டி படிவத்தை போதிய விவரங்களுடன் பூர்த்தி செய்து வருகிற 16-ம் தேதிக்குள் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலைஅலுவலர்கள், தங்களது வீடுகளுக்கு வந்து பெற்றுக் கொள்வர். இதில் மாற்றுத்திறனாளிகள் அரசு சான்றிதழ் நகல், கரோனா பாதிப்பு உள்ளவர்கள், சுகாதார அலுவலரிடம் இருந்து பெற்ற சான்றிதழ் நகல்களை வழங்க வேண்டும்.
குறிப்பாக வாக்குச்சாவடி அலுவலர்களால் வழங்கப்படும் 12டி படிவத்தை பெற வேண்டும் என்பது கட்டாயமில்லை, விருப்பத் தின் அடிப்படையில் பெற்று தபால் வாக்கு அளிக்கலாம்.
வீடியோ பதிவு