

கிருஷ்ணகிரி காட்டி நாயனப்பள்ளியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் தீ வைத்து சேதப்படுத்தியதாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மகாராஜகடை போலீஸார் விசாரணை நடத்தினார்.
இதில் சமத்துவபுரத்தில் வசித்து வரும் கூலிதொழிலாளியான முருகவேல் (38) என்பவர் குளிர் காய வைத்த தீ சிலையில் இருந்த காய்ந்த பூமாலையில் பட்டு தீ பற்றிக் கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து முருகவேலை போலீஸார் கைது செய்தனர்.