

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நேற்று விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆட்சியர் ம.கோவிந் தராவ், பின்னர் செய்தியாளர் களிடம் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 45,337 பேரும், மாற்றுத்திறனாளிகள் 13,946 பேரும் உள்ளனர். இவர்களில் விருப்பமுடையோர் தபால் வாக்கு அளிக்கலாம். மாவட்டத் தில் இதுவரை 1,450 பேர் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார்.