Published : 09 Mar 2021 03:13 AM
Last Updated : 09 Mar 2021 03:13 AM

மகளிர் தினவிழா கொண்டாட்டம் :

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணிகள் 150 மற்றும் 34 சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

கல்லூரி நுழைவு வாயிலில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நின்ற மாணவர்கள், மாணவிகளுக்கும், பேராசிரியைகளுக்கும் இனிப்பு வழங்கி வரவேற்றனர். குழந்தைதிருமணம், பாலியல் வன்முறைகள், வரதட்சணை கொடுமை, ஆணாதிக்கம், பெண் சிசு கொலை போன்றவற்றுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திருநெல்வேலி மாவட்ட அமைச்சு பணியாளர்களுக்கும், காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கும் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார்.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டத்தின் சார்பில்உலக மகளிர் தின சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஜெஸ்லின் கனக இன்பா வரவேற்றார். கல்லூரி பொறுப்பு முதல்வா் எஸ்.ஹெச். முகம்மது அமீன் தலைமை வகித்தார். தூய சவேரியார் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஆா். பிரின்சி சிறப்புரையாற்றினார்.

பாளையங்கோட்டை புஷ்பலதா கல்விக்குழுமம் சார்பில் நடந்த பெண்கள் தின விழாவில்எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதாசேஷயன் இணையவழியில் கருத்துரைவழங்கினார். பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன், முதல்வர் புஷ்பவேணி ஐயப்பன் பங்கேற்றனர்.

மேலப்பாளையத்தில் விமன்இந்தியா மூவ்மென்ட் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரினோஷா தலைமை வகித்தார். துணைத் தலைவர் நூர் நிஷா வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எ.பாத்திமா முன்னிலை வகித்தார். புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் நுஸ்ரத் சிறப்புரை ஆற்றினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணியாற்றும் மகளிர் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பெண் போலீஸார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலையில் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர். தொடர்ந்து, அவர்களுக்கு எஸ்பி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

கோவில்பட்டி

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் உழைக்கும் மகளிருக்கான பாரதி விருது வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், உழைக் கும் மகளிருக் கான பாரதி விருதை வடக்கு திட்டங்குளத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தெய்வஜோதிக்கு வழங்கினார்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மகளிர் தினம் சிறப்பாககொண்டாடப்பட்டது.பள்ளி, கல்லூரிகளில் சமூக இடைவெளியுடன் பெண்கள் தினத்தை மாணவியர், ஆசிரியர்கள் கொண்டாடினர். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், நிறுவனங்களிலும் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.

தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தி, நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) மெர்சி ரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி வேப்பமூடு சந்திப்பில் நிறைவடைந்தது. இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x