கடலூர் மாவட்ட எல்லையில் வாகன சோதனை தீவிரம் :

கடலூர் மாவட்ட எல்லையில் வாகன சோதனை தீவிரம் :

Published on

கடலூர் மாவட்ட எல்லையான சிதம்பரம் வல்லம்படுகை சோதனைசாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோத னையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தையும் மயிலாடுதுறை மாவட்டத்தையும் இணைக்கும் கொள்ளிடம் ஆற்றுப்பாலம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகையில் உள்ளது. தென் மாவட்டத்தையும் சென்னை, புதுச்சேரி போன்ற நகரங்களையும் இணைக்கும் முக்கியப் பாலமாக இந்த பாலம் உள்ளது.

கடலூர் மாவட்ட எல்லையான இந்த வல்லம்படுகை சோதனை சாவடி பகுதியில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி வட்டாட்சியர் (கோயில்கள்) லட்சுமிதேவி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி மற்றும் வருவாய்த் துறையினர், காவல்துறையினர் கொண்ட குழுவினர் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வரு கின்றனர்.

சீர்காழி மார்க்கத்தில் இருந்து கொள்ளிடம் ஆற்று பாலம் வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி பலத்த சோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in