Published : 08 Mar 2021 03:57 AM
Last Updated : 08 Mar 2021 03:57 AM

அதிமுக கூட்டணியில் - புதிய நீதிக்கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்க வலியுறுத்தல் :

ராமநாதபுரத்தில் புதிய நீதிக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ரஜினிகாந்த் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் அகமுடையர் சமுதாயம் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய ராமநாதபுரம் அல்லது திருவாடானை தொகுதியை அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சிக்கு கூட்டணித் தலைமை ஒதுக்க வேண்டும். அப்படி இல்லையேல் அதிமுகவில் அகமுடையர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும். அதுவும் இல்லையேல் அகமுடையர் அதிகம் வசிக்கும் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் புதிய நீதிக்கட்சி தனித்துப் போட்டியிடும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x