

கிருஷ்ணகிரியில் மோட்டார் வாகன பழுதுபார்க்கும் பணியாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமுக்கு, சங்கத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க செயலாளரும், திட்ட இயக்குநருமான சுப்பிரமணி வரவேற்றார். முகாமை, இத்திட்ட மாவட்ட மேலாளர் அருள் தொடங்கிவைத்தார்.
முகாமில், மருத்துவ ஆலோசனைகள், ரத்த பரி சோதனை, எலும்பின் தன்மை அறியும் பரிசோதனை, விபத்து மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, நுண்துளை அறுவை சிகிச்சை, முதுகு தண்டுவடம் தொடர்பான அனைத்து அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன.
இதில், பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள், பட்டறை தொழிலாளர்கள், கிளீனர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று பரி சோதனைகள் செய்து மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், டிஎஸ்பி சரவணன், சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சத்திய நாராயணன், ராஜேந்திரன், அபரஞ்சிராசன், ஹரிவிக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.