

கிருஷ்ணகிரி-குப்பம் சாலையில் காட்டிநாயனப்பள்ளியில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு நுழைவு வாயிலில் பெரியார் சிலை உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெரியார் சிலை மீது டயரை வைத்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர்.
தகவல் அறிந்து மகாராஜகடை காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், சிலை சுத்தம்செய்யப்பட்டு, புதிதாக வண்ணம்பூசப்பட்டது. இதற்கிடையில், தீ வைத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி நேற்று சமத்துவபுரத்தில் வசிக்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.