Published : 07 Mar 2021 03:15 AM
Last Updated : 07 Mar 2021 03:15 AM

பணப் பட்டுவாடாவை கண்காணிக்க : 3 மாவட்டங்களில் ‘ஜிஎஸ்டி பறக்கும் படை’ :

கோவை: தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படு வதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு உதவும் வகையில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப் பட்டுள்ளன.

இதுகுறித்து கோவை மண்டல மத்திய சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) இணைஆணையர் கு.விஜயகிருஷ்ணவேலன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக வாக்காளர்களை கவர கொண்டு செல்லப்படும் கடத்தல், தடைசெய்யப்பட்ட மற்றும் சட்ட விரோத பொருட்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ஐந்து பறக்கும் படைகளும், ஒரு நிலையான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிவிக்க விரும்புவோர் உதவி ஆணையர் சந்தோஷ்குமாரை 9447603774 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தகவல் அளிப்பவர்களின் அடையாளம் பாதுகாக்கப்படும். இதனை பயன்படுத்தி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும். இந்த பறக்கும் படைகள் கோவை தலைமை ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x