

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த சிங்காரப்பேட் டையைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி(23). இவர், கடலூர் மாவட்டத்தைச்சேர்ந்த அபிநயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஜெய்கிருஷ்ணா என்ற 9 மாத குழந்தை இருந்தது. கடந்த 26-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தையை அபிநயா ராயக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குழந்தை உயிரிழந்தது.
பிரேத பரிசோதனையில் குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் குழந்தையை சுவரில் அடித்துக் கொன்றதாக ஒப்புக் கொண்டு, கிராம நிர்வாக அலுவலரிடம் சிவமூர்த்தி சரண் அடைந்தார். சிவமூர்த்தியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமனாரை கொன்றவர் கைது
இந்நிலையில், நரேஷ்குமார் நேற்று முன்தினம் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகாலிங்கத்தை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இதுதொடர்பாக பாரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நரேஷ்குமாரை தேடி வந்தனர்.
நரேஷ்குமார், நேற்று மாலை கிருஷ்ணகிரி குற்றவியல் நீதிமன்றம் 2-ல் நீதிபதி முன்பு சரண் அடைந்தார். பின்னர், அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.