

சுருக்குமடி வலை விவகாரம் தொடர்பாக தேர்தலை புறக்கணிக்க கடலூர் தேவனாம்பட் டினம் மீனவர்கள் முடிவெடுத்துள் ளனர்.
நீதிமன்ற உத்தரவின்படி கட லூர் மாவட்டத்தில் சுருக்கு மடி வலையை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாதென மாவட்ட நிர்வாகம்உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு, இந்த வலையை பயன்படுத்தி வரும் ஒருசில மீனவர் கிராமத்தினர் எதிர்ப்பும், மற்ற மீனவர் கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இதனால் மீனவர் கிராமத் தினரிடையே அடிக்கடி மோதலும் ஏற்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் அண்மையில் கடுமையான உத்தர வினை பிறப்பித்தது. இதையடுத்து கடந்த 4 -ம் தேதி சுருக்குமடி வலையை பயன்படுத்தியதாக 5 படகுகளை பறிமுதல் செய்து அபராதமும் விதிக்கப்பட்டது.
2-வது நாளாக போராட்டம்
இந்நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கடந்த 5-ம் தேதி தேவனாம்பட்டினம் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லவில்லை. சுமார், 600 மீன்பிடி படகுகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இப்போராட்டம் 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. தொடர்ந்து, தேவனாம்பட்டினம் மீனவர் கிராமத் தலைவர் பெரு.ஏகாம்பரம் தலைமையில் ஊர்க்கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பெரு.ஏகாம்பரம் கூறுகையில், "சுருக்குமடி வலையை அனு மதிக்க வேண்டும் என்ற கோரிக் கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கைக்கு வலுவூட்டும் வகையில் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க கூட்டத் தில் முடிவெடுத்துள்ளோம். எங்களுக்கு ஆதரவளிக்க தேவனாம் பட்டினத்திலுள்ள மற்ற சமூகத்தினரையும், பின்னர், சுருக்குமடி வலைக்கு ஆதரவான கிராமத்தின ரையும் சந்திக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.