

சுருக்குமடி வலை விவகாரம் தொடர்பாக தேர்தலை புறக்கணிக்க கடலூர் தேவனாம்பட் டினம் மீனவர்கள் முடிவெடுத்துள் ளனர்.
நீதிமன்ற உத்தரவின்படி கட லூர் மாவட்டத்தில் சுருக்கு மடி வலையை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாதென மாவட்ட நிர்வாகம்உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு, இந்த வலையை பயன்படுத்தி வரும் ஒருசில மீனவர் கிராமத்தினர் எதிர்ப்பும், மற்ற மீனவர் கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இதனால் மீனவர் கிராமத் தினரிடையே அடிக்கடி மோதலும் ஏற்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் அண்மையில் கடுமையான உத்தர வினை பிறப்பித்தது. இதையடுத்து கடந்த 4 -ம் தேதி சுருக்குமடி வலையை பயன்படுத்தியதாக 5 படகுகளை பறிமுதல் செய்து அபராதமும் விதிக்கப்பட்டது.
2-வது நாளாக போராட்டம்