Regional02
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 1.40 லட்சம் திருட்டு :
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி அருகே உள்ள கோடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தவமணி (60). இவர் நேற்று முன்தினம் மாலை, குந்தாரப்பள்ளியில் உள்ள ஒரு வங்கியில் நகையை அடமானம் வைத்து, ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தைப் பெற்றார்.
அதை ஒரு பையில் வைத்து, தனது இருசக்கர வாகன பெட்ரோல் டேங்க் கவரில் வைத்தார். பின்னர் குந்தாரப்பள்ளி - வேப்பனப்பள்ளி சாலையில் உள்ள ராமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த காய்கறி கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது,டேங்க் கவரில் வைத்திருந்த பணப்பையை காணவில்லை. இதுதொடர்பான புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
