3,180 நோட்டுப் புத்தகங்கள் பறிமுதல் :

3,180 நோட்டுப் புத்தகங்கள் பறிமுதல் :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சணப்பிரட்டி காலனியில் அதிமுக சார்பில் கேசவன் என்பவர் வீட்டில் நோட்டுப்புத்தகங்கள் வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் வந்த புகாரின்பேரில், மணிமேகலை தலைமையிலான பறக்கும் படை அணியினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.

இதில், அங்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் படங்கள் அச்சிடப்பட்ட 3,180 நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து, பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

1.90 லட்சம் பறிமுதல்

இதேபோல, வேப்பந்தட்டை வட்டம் உடும்பியத்தில் துணை வட்டாட்சியர் து.பாக்யராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திருச்சி சத்திரப்பட்டி கோபிநாத், கொட்டப்பட்டு வினோத் ஆகியோர் வந்த காரில் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in