

ராமநாதபுரத்தில் முன்விரோதத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் வ.உ.சி. நகரைச் சேர்ந்த இருளாண்டி மகன் பனையடியான் (43). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், புதிய பஸ் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுபவர்கள் சிலருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று மாலை பனையடியானை ஆட்டோ ஓட்டுநரான அண்ணாமலை உள்ளிட்ட சிலர் கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்தார். இம்மோதலில் அண்ணாமலை, ராஜேஷ் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த மூவரையும் மீட்ட கேணிக்கரை போலீஸார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், சிறிது நேரத்தில் பனையடியான் உயிரிழந்தார். பனையடியானுக்கு மனைவி, மகன் உள்ளனர். தகவலறிந்து உறவினர்கள் மருத்துவமனையில் திரண் டனர். மாவட்ட எஸ்பி இ.கார்த்திக், டிஎஸ்பி கி.வெள்ளத்துரை சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.