வாக்குச் சாவடிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு :

வாக்குச் சாவடிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு :
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், பெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பண நடமாட்டம் குறித்து அவ்வப்போது சோதனைகளை நடத்தி வருகின்றனர். அதேபோல் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்கவும், அதில் ஏற்கெனவே தேர்தலுக்கு பயன்படுத்தி பதிவான விவரங்களை அழிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,379 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 1,050-க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள வாக்குச் சாவடி மையங்கள் பிரிக்கப்பட்டு 493 துணை வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடி மையங்களை ஆட்சியர் மகேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் ஆட்சியர் காலனி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி உட்பட நகரில் உள்ள பல்வேறு இடங்களில் இவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நிர்மலா உடனிருந்தனர்.காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தை ஆய்வு செய்கிறார் ஆட்சியர் மகேஸ்வரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in