Regional02
தேர்தல் பாதுகாப்பு: முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு :
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முப்படையைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். ஆகவே, தேர்தல் பாதுகாப்பு பணி செய்ய விருப்பமும், நல்ல திடகாத்திரமும் வாய்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், இதர தரத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி உரிய படிவத்தை பெற்று பூர்த்தி செய்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், வீரர்களுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்படும் பணிநாள் ஊதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்படும்.
