பரமக்குடியில் ரூ.6.37 லட்சம் பறிமுதல் :

பரமக்குடியில் ரூ.6.37 லட்சம் பறிமுதல் :
Updated on
1 min read

பரமக்குடி அருகே பார்த்தி பனூர் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். மினிசரக்கு வாகனங்களில் வந்த கடலூர் மாவட்டம், வேப்பூர் ராயப்பாளையத்தைச் சேர்ந்த வியாபாரி துரைராஜிடம் ரூ. 2,72,500, மதுரைகொடிகுளம் புதூர் வியாபாரி ஆனைமலையிடம் ரூ.2,00,000, விருதுநகர் மாவட்டம்பொட்டபச் சேரியைச் சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் ரூ. 91,800ஐ பறிமுதல் செய்தனர்.சத்திரக்குடி ஓட்டமடை காளிகோயில் அருகே பறக்கும்படையினர் நடத்திய வாகனச் சோதனையில் அச்சுந்தன்வயல் சேதுபதி நகரைச் சேர்ந்த ஆடு வியாபாரி பாக்கியத்திடமிருந்து ரூ 73,000-ஐ பறிமுதல்செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in