

கிருஷ்ணகிரியில் பாஜக சார்பில் வெற்றிக் கொடி யாத்திரை நடந்தது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை முதல் கார்நேசன் திடல் வரை, பாஜக சார்பில் வெற்றிக் கொடி யாத்திரை நேற்று நடந்தது. தொகுதி பொறுப்பாளர் மீசை அர்ச்சுணன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் டெம்போ முருகேசன் வரவேற்றார். இப்பேரணி காந்தி சிலை அருகில் தொடங்கி காந்தி சாலை, ரவுண்டானா வழியாக கார்நேசன் திடல் சென்றடைந்தது.
நகர தலைவர் ரமேஷ் நன்றி கூறினார். இப்பேரணியையொட்டி காவல் ஆய்வாளர்கள் கிருஷ்ணகிரி பாஸ்கர், மகாராஜகடை கணேஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.