

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, சட்ட விரோதமாக மது விற்பனை செய்தல் மற்றும் கடத்துதல் போன்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், மதுபான கடைகளில் தினசரி விற்பனையைக் கண்காணிக்கவும், மதுபானம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட அளவில் சிறப்பு பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இப்பறக்கும் படையில் கிருஷ்ணகிரி டாஸ்மாக் கிடங்கு மேலாளர் வெங்கடேசன் தலைமையில் அலுவலர்கள் காளியப்பன், நாச்சி, சிவன், சத்தியநாராயணன் ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் மதுபானக் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான புகார்களுக்கு டாஸ்மாக் கிடங்கு மேலாளரை 94439 10022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.