

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, ஓசூர் தொரப்பள்ளி திப்பளம் பகுதியைச் சேர்ந்த நவீன் (21) என்பவர், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர், ஓசூர் நகர மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நவீனை போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
அதில், குற்றம் சாட்டப்பட்ட நவீனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.