Published : 05 Mar 2021 03:17 AM
Last Updated : 05 Mar 2021 03:17 AM

தஞ்சாவூரில் கன்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட - முதல்வர் பழனிசாமி படம் அச்சிடப்பட்ட 31,000 புத்தகப் பைகள் பறிமுதல் :

உத்தரப் பிரதேசத்தில் இருந்து தஞ்சாவூருக்கு கன்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட, முதல்வர் பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படங்கள் அச்சடிக்கப்பட்ட 31 ஆயிரம் புத்தகப் பைகளை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ராஜஸ்தான் பதிவெண் கொண்ட ஒரு கன்டெய்னர் லாரி வெகுநேரம் நிறுத்தப்பட்டிருப்பதாக, தேர்தல் பறக்கும் படையினருக்கு அப்பகுதி யைச் சேர்ந்தவர்கள் தகவல் அளித் தனர். இதையடுத்து, லூர்து பிர காஷ் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் அங்கு சென்று, கன்டெய்னர் லாரியை சோதனை யிட்டனர். அதில், முதல்வர் பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயல லிதா ஆகியோரின் படங்கள் அச்சடிக்கப்பட்ட புத்தகப் பைகள் இருந் தன. இதையடுத்து, கல்வித் துறை அதிகாரிகள், வல்லம் டிஎஸ்பி சீதாராமன் தலை மையிலான போலீஸாரும் அங்கு வந்தனர்.

இதற்கிடையே, திமுக வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் அங்கு திரண்ட திமுகவினர், “தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து புத்தகப் பைகள் வருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்தப் பைகளை வேறு இடங்களுக்கு அனுப்பும் பணிகளை நிறுத்த வேண்டும்” எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, புத்தகப் பைகளுடன் கன்டெய்னர் லாரியை தஞ்சாவூர் ராஜப்பா நகரில் உள்ள மாநகராட்சிப் பள்ளிக்கு தேர்தல் பறக்கும் படையினர் கொண்டு சென்றனர். தொடர்ந்து, அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் சார்பில், தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட 9 கல்வி வட்டாரங்களில் பயிலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக ரூ.47.64 லட்சம் மதிப்பிலான 31,083 புத்தகப் பைகள் அந்த கன்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்டதும், இந்த லாரி உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் என்ற இடத்திலிருந்து கடந்த பிப்.22-ம் தேதி புறப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கன்டெய்னர் லாரியில் 30-க்கும் மேற்பட்ட பண்டல்களில் இருந்த புத்தகப் பைகள் கீழே இறக்கப்பட்டன. பின்னர், திமுகவினர் முன்னி லையில், புத்தகப் பைகளை கல்வித் துறை பணியாளர்களும், போலீஸாரும் சோதனையிட்டனர். பின்னர், புத்தகப் பைகளை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், அவற்றை மாநகராட்சிப் பள்ளியில் உள்ள அறையில் வைத்து பூட்டி, சீல் வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x