கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா :

ஈரோடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி மலர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். அடுத்தபடம்: குண்டம் திருவிழாவை முன்னிட்டு, குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
ஈரோடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி மலர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். அடுத்தபடம்: குண்டம் திருவிழாவை முன்னிட்டு, குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
Updated on
1 min read

ஈரோடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை யொட்டி, பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா நடந்து வருகிறது. இந்தஆண்டு கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக,குறைந்த எண்ணிக்கையிலான பக்தர் களே குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்கள் போராட்டம் நடத்தியும் அனைத்து பக்தர்களையும் குண்டம் இறங்க அனுமதிக்க முடியாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் கடந்த வாரம் கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் கொண்டத்து காளியம்மனுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வந்தனர்.

நேற்று முன் தினம் இரவு குண்டம் தயார் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, தலைமைப்பூசாரி முதலாவதாக குண்டம் இறங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் கோயில் பூசாரிகள், கோயில் நிர்வாகிகள், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டும் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

இதனால், குண்டம் நிகழ்ச்சி இந்தாண்டு சில மணி நேரத்திற்குள் முடிவடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in