

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக் கோட்டை புறவழிச்சாலையில் உள்ள பத்மநாதன் என்பவருக்கு சொந்தமான கரும்பு வயலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், 10 ஏக்கரில் கரும்பு, அருகில் 2.5 ஏக்கரில் இருந்த யூகலிப்டஸ் மரங்கள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விசாரிக்கின்றனர்.