

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் எம்பிஏ துறை சார்பில், ‘சோனா பஜார்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை, சோனா கல்விக் குழும துணைத் தலைவர் தியாகு வள்ளியப்பா, கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், டீன் அகிலாண்டேஸ்வரி, எம்பிஏ துறை துணை இயக்குநர் செல்வராஜ் ஆகியோர் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து, அனைத்து விற்பனை யகங்களையும் அவர்கள் பார்வை யிட்டனர்.
நிகழ்ச்சியில், கல்லூரி துணைத் தலைவர் தியாகு வள்ளியப்பா பேசும்போது, “தற்போதைய சூழலில் சுய தொழிலை ஊக்குவிக்கும் நோக்கமாக ஒரு பொருளை எவ்வாறு சந்தைக்கு கொண்டு வருதல், விளம்பரப் படுத்துதல், வாடிக்கையாளர் தேவையை புரிதல், வாடிக்கை யாளர்களுக்கு சிறப்பாக சேவை அளித்தல் போன்ற திறன் களை கற்பிக்கும் விதமாக எம்பிஏ பயிலும் மாணவர்களுக்கு இது போன்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
பின்னர் எம்பிஏ மாணவர்கள் அணியாக திரண்டு பல்வேறு பொருட்களை விற்பனை செய்தனர். இதில், சோனா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ந்தனர்.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பிரபாதேவி, ரமேஷ்குமார், ஜோதி பிரான்சினா ஆகியோர் செய்திருந்தனர்.