திருவாரூர் மாவட்டத்தில்  243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

திருவாரூர் மாவட்டத்தில் 243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

Published on

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர் பான ஆய்வுக் கூட்டம் ஆட்சி யரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான வே.சாந்தா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், எஸ்.பி கயல்விழி மற்றும் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களி டம் ஆட்சியர் கூறியது: திருவா ரூர் மாவட்டம் முழுவதும் 10.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 243 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறி யப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திருவாரூர் மாவட்டத் துக்கு 91 ராணுவ வீரர்கள் கொண்ட துணை ராணுவப்படை வரவழைக்கப்பட் டுள்ளது. தேர்தல் பணிக்காக 2,000 அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 14 சோதனை சாவடிகள் அமைக் கப்பட்டு, வாகன சோதனைகள் நடத்தப்படுகின்றன. மாவட்டத் தில் கடந்த தேர்தல்களில்1,168 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 286 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக் கப்பட்டு மொத்தம் 1,454 வாக்குச்சாவடிகள் ஏற்படுத் தப்பட உள்ளன என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in