தா.பாண்டியன் மறைவுக்கு அஞ்சலி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைதி ஊர்வலம்

தா.பாண்டியன் மறைவுக்கு அஞ்சலி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைதி ஊர்வலம்
Updated on
1 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.-யுமான தா.பாண்டியன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

மறைந்த தா.பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் பங்கேற்கும் அமைதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, திருப்பூர் குமரன் சிலை அருகே நேற்று காலை தொடங்கிய ஊர்வலம் டவுன்ஹால், குமரன் சாலை வழியாக மாநகராட்சி அருகே நிறைவு பெற்றது. அங்கு, தா.பாண்டியன் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஜி.காளியப்பன் தலைமை வகித்தார். மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in