தொழிலாளி கொலை; உறவினர் தலைமறைவு

தொழிலாளி கொலை; உறவினர் தலைமறைவு
Updated on
1 min read

பல்லடம் அருகே பெயிண்டிங் தொழிலாளியை அடித்து கொலை செய்த உறவினரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் எஸ்.மல்லேஸ்வரன் (43). இவர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்னூர் அருகே தனியார் நிறுவன கட்டிடத்தில் தங்கி, அங்கு பெயிண்டிங் வேலை செய்து வந்தார். அவரது உறவினரான வழிவிட்ட அய்யனார் (41) உள்ளிட்டோருடன் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில், பல்லடம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் இரவு அனைவரும் மது வாங்கி அங்குள்ள மதுக்கூடத்தில் வைத்து அருந்தியுள்ளனர். அப்போது, மல்லேஸ்வரன், வழிவிட்ட அய்யனார் இடையே தரக்குறைவாக பேசியது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உடன் இருந்தவர்கள் சமாதானம் செய்யவே, அனைவரும் தங்கும் இடத்துக்கு திரும்பியுள்ளனர்.

அன்றைய தினம் நள்ளிரவு அனைவரும் உறக்கத்தில் இருந்தபோது கண் விழித்த வழிவிட்ட அய்யனார், அருகே இருந்த இரும்புக் கம்பியால் மல்லேஸ்வரன் தலையில் தாக்கியுள்ளார். இதில், மல்லேஸ்வரன் உயிரிழந்தார். வழிவிட்ட அய்யனார் தப்பிச் சென்றார். நேற்று காலை பல்லடம் போலீஸார் சென்று, மல்லேஸ்வரன் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை வழக்கு பதிவு செய்து வழிவிட்ட அய்யனாரை தேடி வருகின்றனர்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in