

சிவகங்கை மாவட்டம், திருப்பத் தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மாசி மகத் தெப்ப உற்சவ விழாவையொட்டி தீர்த்த வாரி நடந்தது.
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் மாசித் தெப்ப உற்சவ விழா பிப்.18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது. பிப்.26-ம் தேதி தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்ச்சியும், பிப்.27-ம் தேதி தெப்பம் கண்டருளல் நிகழ்ச்சியும் நடந்தன.
நிறைவு நாளான நேற்று காலை 9 மணிக்கு கோயிலில் இருந்து தேவியருடன் உற் சவர் ஊர்வலமாக வந்து ஜோசியர் குளம் எதிரே உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந் தருளினார்.
அப்போது சிறப்பு அலங்காரத்துடன் பக்தர் களுக்குக் காட்சியளித்தார். பிறகு சக்கரத் தாழ்வாருக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து குளத்தில் தீர்த்த வாரி உற்சவமும் நடந்தது.