மூதாட்டியிடம் நகை திருடிய இருவர் கைது
வேலூரில் மூதாட்டியிடம் தங்க நகையை திருடிச்சென்ற 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் அடுத்த கழனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயா (75). இவர், கடந்த 24-ம் தேதி வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தனது ஊருக்கு நகர பேருந்தில் பயணம் செய்தார். அப்போது அவர் வைத்திருந்த கைப்பையில் இருந்து ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் விஜயா புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வேலூர் முத்துமண்படம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (28), சேண் பாக்கம் பகுதியைச் சேர்ந்த யாசின் (31) ஆகிய இருவர் தான் மூதாட்டியிடம் தங்க நகையை திருடியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, தங்க நகையை திருடிய 2 பேரையும் வடக்கு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
