

ஆவடியில் வீடு புகுந்து சிறுமியை கடத்திச் சென்று கட்டாய தாலிகட்டி, பாலியல் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர், போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, காமராஜர் நகர் பகுதியில் கூலி வேலை செய்து வசித்து வரும் தம்பதிக்கு, 15 வயதில் மகள் உள்ளார். நேற்று முன்தினம் காலையில் தம்பதி வேலைக்குச் சென்றனர்.
பின்னர், மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் மகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர். எங்கு தேடிப் பார்த்தும் மகளை கண்டுபிடிக்க முடியாததால், சிறுமியின் பெற்றோர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஆவடி, நந்தவனமேட்டூர், கட்டபொம்மன் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ஞானப்பிரகாசம் (20) என்பவர், சிறுமியை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரது பிடியில் இருந்த சிறுமியையும் மீட்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்