

கிருஷ்ணகிரி மாவட்ட அருந்ததியர் மக்கள் முற்போக்கு நலச் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம் கொண்டேப்பள்ளி அருகில் உள்ள தானம்பட்டி கிராமத்தில், அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த 156குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
எங்களுக்கு சொந்த இடமோ,வீடோ கிடையாது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறோம். எனவே எங்களுக்கு கொண்டேப்பள்ளி ஊராட்சி தானம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை நில எடுப்பு செய்து, இலவச வீட்டு மனையும், இலவச பட்டாவும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கடந்த 2011 முதல் மனு அளித்து வருகிறோம்.
எனவே எங்கள் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.