பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின கட்டுரை, ஓவியப் போட்டிகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின கட்டுரை, ஓவியப் போட்டிகள்
Updated on
1 min read

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பின் அவசியம் என்ற தலைப்பில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட உள்ளது.

கட்டுரைகள் ஏ4 தாள்களில் 4 பக்கங்களுக்கு மிகாமலும், ஓவியங்கள் சார்ட்டில் வரையப் பட்டிருக்க வேண்டும். இப்போட்டியில் கலந்து கொள்ளும் குழந்தைகள் மேற்படி தலைப்பில் தங்களது படைப்புகளை நேரிலோ அல்லது தபால் மூலமோ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண் 8, 10 டி.ஆர்.டி.ஏ. வணிக வளாகம், கிருஷ்ணகிரி - 635 001 என்ற முகவரிக்கு மார்ச் மாதம் 5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in