தூத்துக்குடியில் ஒரேநாளில் இருவர் கொலை

தூத்துக்குடியில் ஒரேநாளில் இருவர் கொலை
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் இருவர் கொலை செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி கதிர்வேல் நகர் 1-வது தெருவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் மாரிமுத்து (36). கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இக்கொலை நடந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக தூத்துக்குடி பாலவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் (41),அண்ணாநகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மதுரை முத்து (24) ஆகிய2 பேரை சிப்காட் போலீஸார் கைதுசெய்தனர். மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதியம்புத்தூர்

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை புளியமரத்து அரசரடி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு டீக்கடை முன்பு சண்முகராஜ் சென்ற போது, அங்கு வந்த இம்மானுவேல் அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளார். அப்போது கட்டையால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த சண்முகராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக புதியம்புத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, இம்மானுவேலை கைது செய்தனர். சம்பவ இடங்களை எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டார். மேலும், கொலையாளிகளை விரைவாக கைது செய்த போலீஸாரை அவர் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in