

நாகர்கோவில்: கொல்லங்கோட்டை அடுத்த வெங்கஞ்சியை சேர்ந்தவர் பால் மகேந்திரன் (38). தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் மீன் சுமக்கும் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், அப்பகுதியில் உள்ள கட்டிடத் தொழிலாளியான தனது நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது நண்பரின் 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுபற்றி அறிந்த சிறுமியின் தாயார் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி பால்மகேந்திரனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.