கூடங்குளம் அணுமின் நிலைய மேலாளர் தற்கொலை

கூடங்குளம் அணுமின் நிலைய மேலாளர் தற்கொலை
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் சிவராஜ் (29). கூடங்குளம் அணு மின் நிலைய பிளான்ட் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்குநேற்று வேப்பனப்பள்ளியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில், மணப்பெண்ணுக்கு இன்னும் 18 வயது நிறைவடையவில்லை எனவும், அதிகாரிகளுக்கு தெரிந்தால் திருமணத்தை நிறுத்திவிடுவார்கள் எனவும் மர்ம நபர்ஒருவர், தொலைபேசி மூலம்சிவராஜூக்கு தகவல் கொடுத்துள்ளார். இதில் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in